1 Θέλω விரும்புகிறேன் γὰρ ஏனெனில் ὑμᾶς உங்களை εἰδέναι, அறிய ἡλίκον எவ்வளவு ἀγῶνα போராட்டம் ἔχω கொண்டிருக்கிறேன் ὑπὲρ –சார்பாக ὑμῶν, உங்களுக்காகவும் καὶ மற்றும் τῶν –உடைய ἐν –இல் Λαοδικείᾳ, லவோதிக்கேயாவிலுள்ளவர்களுக்காகவும் καὶ மற்றும் ὅσοι எத்தனையோர் οὐχ இல்லை ἑόρακαν கண்டதில்லை τὸ –ஆகிய πρόσωπόν முகத்தை μου, என்னுடைய ἐν –இல் σαρκί, மாம்சத்தில்
உங்களுக்காகவும் லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லோருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன்.
2 ἵνα –ஆக παρακληθῶσιν ஆறுதல்–பெறுவார்கள் αἱ –ஆகிய καρδίαι இருதயங்கள் αὐτῶν, அவர்களுடைய συμβιβασθέντες ஒன்றிணைக்கப்பட்டு ἐν –இல் ἀγάπῃ, அன்பில் καὶ மற்றும் εἰς –நோக்கி πᾶν எல்லா πλοῦτος ஐசுவரியம் τῆς –உடைய πληροφορίας நிறைவான–உறுதியின் τῆς –உடைய συνέσεως; புத்தியின் εἰς –நோக்கி ἐπίγνωσιν அறிவை τοῦ –உடைய μυστηρίου இரகசியத்தின் τοῦ –உடைய Θεοῦ -- தேவனுடைய Χριστοῦ; கிறிஸ்து–வின்
அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.
3 ἐν –இல் ᾧ யாரில் εἰσιν இருக்கின்றன πάντες எல்லா οἱ –ஆகிய θησαυροὶ பொக்கிஷங்கள் τῆς –உடைய σοφίας ஞானத்தின் καὶ மற்றும் γνώσεως அறிவின் ἀπόκρυφοι. மறைவானவைகள்
அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.
4 Τοῦτο இதை λέγω சொல்கிறேன் ἵνα –ஆக μηδεὶς ஒருவரும்–இல்லை ὑμᾶς உங்களை παραλογίζηται ஏமாற்றுவார்கள் ἐν –இல் πιθανολογίᾳ. நயவஞ்சக–வார்த்தைகளினால்
ஒருவனும் பொய்யான வாதங்களால் உங்களை ஏமாற்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
5 εἰ –ஆனால் γὰρ ஏனெனில் καὶ மேலும் τῇ –இல் σαρκὶ மாம்சத்தில் ἄπειμι, தொலைவிலிருக்கிறேன் ἀλλὰ ஆனாலும் τῷ –இல் πνεύματι ஆவியில் σὺν –உடன் ὑμῖν உங்களுடன் εἰμι, இருக்கிறேன் χαίρων சந்தோஷப்பட்டு καὶ மற்றும் βλέπων கண்டு ὑμῶν உங்களுடைய τὴν –ஆகிய τάξιν, ஒழுங்கை καὶ மற்றும் τὸ –ஆகிய στερέωμα உறுதியை τῆς –உடைய εἰς –நோக்கிய Χριστὸν கிறிஸ்து–மேல் πίστεως விசுவாசத்தின் ὑμῶν. உங்களுடைய
சரீரத்தின்படி நான் தூரமாக இருந்தும், ஆவியின்படி உங்களோடுகூட இருந்து, உங்களுடைய ஒழுங்கையும், கிறிஸ்துவின் மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.
6 Ὡς எப்படியோ οὖν ஆகையால் παρελάβετε ஏற்றுக்கொண்டீர்கள் τὸν –ஆகிய Χριστὸν கிறிஸ்து Ἰησοῦν இயேசு–வை τὸν –ஆகிய Κύριον, ஆண்டவராக ἐν –இல் αὐτῷ அவரில் περιπατεῖτε, நடங்கள்
ஆகவே, நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
7 ἐρριζωμένοι வேரூன்றி καὶ மற்றும் ἐποικοδομούμενοι கட்டப்பட்டு ἐν –இல் αὐτῷ, அவரில் καὶ மற்றும் βεβαιούμενοι உறுதிப்படுத்தப்பட்டு τῇ –இல் πίστει, விசுவாசத்தில் καθὼς எப்படியோ ἐδιδάχθητε, போதிக்கப்பட்டீர்களோ περισσεύοντες பெருகி (ἐν (–இல் αὐτῇ) அதில்) ἐν –இல் εὐχαριστίᾳ. நன்றி–செலுத்தலில்
நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நன்றி செலுத்துவதோடு அதிலே பெருகுவீர்களாக.
8 Βλέπετε கவனியுங்கள் μή –இல்லை τις யாராவது ὑμᾶς உங்களை ἔσται, இருப்பான் ὁ –ஆகிய συλαγωγῶν கொள்ளையடிக்கிறவன் διὰ மூலமாக τῆς –உடைய φιλοσοφίας தத்துவஞானத்தின் καὶ மற்றும் κενῆς வெறுமையான ἀπάτης, ஏமாற்றத்தின் κατὰ –படி τὴν –ஆகிய παράδοσιν பாரம்பரியத்தின் τῶν –உடைய ἀνθρώπων, மனிதர்களின் κατὰ –படி τὰ –ஆகிய στοιχεῖα மூலக்கூறுகளின் τοῦ –உடைய κόσμου, உலகத்தின் καὶ மற்றும் οὐ இல்லை κατὰ –படி Χριστόν. கிறிஸ்து–படி
உலக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அது மனிதர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல.
9 ὅτι ஏனெனில் ἐν –இல் αὐτῷ அவரில் κατοικεῖ வாசம்–பண்ணுகிறது πᾶν எல்லா τὸ –ஆகிய πλήρωμα நிறைவும் τῆς –உடைய Θεότητος தைவத்தன்மையின் σωματικῶς; சரீரபூர்வமாக
ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் குடிகொண்டிருக்கிறது.
10 καὶ மற்றும் ἐστὲ இருக்கிறீர்கள் ἐν –இல் αὐτῷ அவரில் πεπληρωμένοι, நிரப்பப்பட்டவர்கள் ὅς யார் ἐστιν இருக்கிறார் ἡ –ஆகிய κεφαλὴ தலை πάσης எல்லா ἀρχῆς துரைத்தனத்தின் καὶ மற்றும் ἐξουσίας, அதிகாரத்தின்
மேலும் எல்லாத் துரைத்தனங்களுக்கும் அதிகாரத்திற்கும் தலைவராக இருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள்.
11 ἐν –இல் ᾧ யாரில் καὶ மேலும் περιετμήθητε விருத்தசேதனம்–பண்ணப்பட்டீர்கள் περιτομῇ விருத்தசேதனத்தினால் ἀχειροποιήτῳ, கையால்–செய்யப்படாத ἐν –இல் τῇ –ஆகிய ἀπεκδύσει கழற்றியில் τοῦ –உடைய σώματος சரீரத்தின் τῆς –உடைய σαρκός, மாம்சத்தின் ἐν –இல் τῇ –ஆகிய περιτομῇ விருத்தசேதனத்தினால் τοῦ –உடைய Χριστοῦ; கிறிஸ்து–வின்
அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்திற்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.
12 συνταφέντες உடன்–அடக்கம்–செய்யப்பட்டு αὐτῷ அவருடன் ἐν –இல் τῷ –ஆகிய βαπτισμῷ, ஸ்நானத்தில் ἐν –இல் ᾧ யாரில் καὶ மேலும் συνηγέρθητε, உடன்–எழுப்பிக்கப்பட்டீர்கள் διὰ மூலமாக τῆς –உடைய πίστεως விசுவாசத்தின் τῆς –உடைய ἐνεργείας செயல்பாட்டின் τοῦ –உடைய Θεοῦ, தேவனுடைய τοῦ –ஆகிய ἐγείραντος எழுப்பினவருடைய αὐτὸν அவரை ἐκ –இலிருந்து νεκρῶν. மரித்தோரிலிருந்து
ஞானஸ்நானத்திலே அவரோடுகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடுகூட உயிரோடு எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.
13 καὶ மற்றும் ὑμᾶς, உங்களை νεκροὺς மரித்தவர்களாக ὄντας, இருந்த ‹ἐν› –இல் τοῖς –ஆகிய παραπτώμασιν மீறுதல்களிலும் καὶ மற்றும் τῇ –ஆகிய ἀκροβυστίᾳ விருத்தசேதனம்–இல்லாமையில் τῆς –உடைய σαρκὸς மாம்சத்தின் ὑμῶν, உங்களுடைய συνεζωοποίησεν உடன்–உயிர்ப்பித்தார் ὑμᾶς உங்களை σὺν –உடன் αὐτῷ, அவருடன் χαρισάμενος கிருபையாக–கொடுத்து ἡμῖν நமக்கு πάντα எல்லா τὰ –ஆகிய παραπτώματα; மீறுதல்களை
உங்களுடைய பாவங்களினாலேயும், உங்களுடைய சரீரவிருத்தசேதனம் இல்லாமையினாலேயும் மரித்தவர்களாக இருந்த உங்களையும் அவரோடுகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;
14 ἐξαλείψας அழித்து τὸ –ஆகிய καθ’ –எதிரான ἡμῶν நமக்கு χειρόγραφον கையெழுத்தை τοῖς –ஆகிய δόγμασιν, கட்டளைகளில் ὃ எது ἦν இருந்ததோ ὑπεναντίον எதிரானது ἡμῖν; நமக்கு καὶ மற்றும் αὐτὸ அதை ἦρκεν எடுத்தார் ἐκ –இலிருந்து τοῦ –உடைய μέσου, நடுவிலிருந்து προσηλώσας ஆணியடித்து αὐτὸ அதை τῷ –ஆகிய σταυρῷ; சிலுவையில்
நமக்கு எதிரானதாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தை அழித்து, அதை நடுவில் இல்லாதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
15 ἀπεκδυσάμενος உரிந்து τὰς –ஆகிய ἀρχὰς துரைத்தனங்களையும் καὶ மற்றும் τὰς –ஆகிய ἐξουσίας, அதிகாரங்களையும் ἐδειγμάτισεν பகிரங்கமாக்கினார் ἐν –இல் παρρησίᾳ, வெளிப்படையாக θριαμβεύσας வெற்றி–பவனியாக்கி αὐτοὺς அவர்களை ἐν –இல் αὐτῷ. அவரில்
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் பறித்துக்கொண்டு, வெளியரங்கமாக வெளிப்படுத்தி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார்.
16 Μὴ –இல்லை οὖν ஆகையால் τις யாராவது ὑμᾶς உங்களை κρινέτω -- நியாயம்–தீர்க்கட்டும் ἐν –இல் βρώσει, போஜனத்தில் καὶ ஆகிலும் ἐν –இல் πόσει, பானத்தில் ἢ அல்லது ἐν –இல் μέρει பகுதியில் ἑορτῆς, பண்டிகையின் ἢ அல்லது νεομηνίας, அமாவாசையின் ἢ அல்லது σαββάτων, ஓய்வுநாள்களின்
ஆகவே, உணவையும், பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையும் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாமல் இருப்பானாக.
17 ἅ அவை ἐστιν இருக்கின்றன σκιὰ நிழல் τῶν –உடைய μελλόντων; வரப்போகிறவைகளின் τὸ –ஆகிய δὲ ஆனால் σῶμα சரீரம் τοῦ –உடைய Χριστοῦ. கிறிஸ்து–வின்
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாக இருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
18 μηδεὶς யாரும்–இல்லை ὑμᾶς உங்களை καταβραβευέτω, பரிசில்–தட்டி–நீக்குவான் θέλων விரும்பி ἐν –இல் ταπεινοφροσύνῃ, தாழ்மையில் καὶ மற்றும் θρησκείᾳ வழிபாட்டில் τῶν –உடைய ἀγγέλων, தூதர்களின் ἃ அவைகளை ἑόρακεν கண்டதாக ἐμβατεύων, ஆழமாக–நுழைந்து εἰκῇ வீணாக φυσιούμενος பெருமையடைந்து ὑπὸ –ஆல் τοῦ –உடைய νοὸς மனதின் τῆς –உடைய σαρκὸς மாம்சத்தின் αὐτοῦ, அவனுடைய
மூட்டுகளாலும் தசை நரம்புகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாக வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல்,
19 καὶ மற்றும் οὐ இல்லை κρατῶν பற்றிக்கொண்டிருக்கிறவன் τὴν –ஆகிய Κεφαλήν, தலையை ἐξ –இலிருந்து οὗ யாரிலிருந்து πᾶν எல்லா τὸ –ஆகிய σῶμα, சரீரம் διὰ மூலமாக τῶν –உடைய ἁφῶν மூட்டுகளின் καὶ மற்றும் συνδέσμων பிணைப்புகளின் ἐπιχορηγούμενον வழங்கப்பட்டு καὶ மற்றும் συμβιβαζόμενον, ஒன்றிணைக்கப்பட்டு αὔξει வளருகிறது τὴν –ஆகிய αὔξησιν வளர்ச்சியை τοῦ –உடைய Θεοῦ. தேவனுடைய
மாய்மாலமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமடைந்து, காணாத காரியங்களிலே துணிவாய் நுழைந்து, தன் சரீரசிந்தையினாலே வீணாக கர்வம் கொண்டிருக்கிற எவனும் உங்களுடைய பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை ஏமாற்றாதிருக்கப் பாருங்கள்.
20 Εἰ –ஆனால் ἀπεθάνετε மரித்தீர்கள் σὺν –உடன் Χριστῷ கிறிஸ்து–வுடன் ἀπὸ –இலிருந்து τῶν –உடைய στοιχείων மூலக்கூறுகளிலிருந்து τοῦ –உடைய κόσμου, உலகத்தின் τί ஏன் ὡς எப்படியோ ζῶντες, உயிரோடு–இருக்கிறவர்களாக ἐν –இல் κόσμῳ உலகத்தில் δογματίζεσθε? கட்டளைகளுக்கு–உட்படுகிறீர்களா
நீங்கள் கிறிஸ்துவோடுகூட உலகத்தின் வழக்கங்களுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,
21 Μὴ –இல்லை ἅψῃ! தொடு μηδὲ மற்றும்–இல்லை γεύσῃ! ருசி–பார் μηδὲ மற்றும்–இல்லை θίγῃς! தொடு
மனிதர்களுடைய கட்டளைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசி பாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உடன்படுகிறதென்ன?
22 ἅ அவை ἐστιν இருக்கின்றன πάντα எல்லாம் εἰς –நோக்கி φθορὰν அழிவிற்கு τῇ –இல் ἀποχρήσει, பயன்படுத்தலில் κατὰ –படி τὰ –ஆகிய ἐντάλματα கட்டளைகளின் καὶ மற்றும் διδασκαλίας போதனைகளின் τῶν –உடைய ἀνθρώπων, மனிதர்களின்
இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.
23 ἅτινά அவை ἐστιν இருக்கின்றன λόγον வார்த்தையின் μὲν உண்மையிலேயே ἔχοντα தோற்றம்–கொண்டிருக்கிற σοφίας, ஞானத்தின் ἐν –இல் ἐθελοθρησκίᾳ தன்ிச்சையான–வழிபாட்டில் καὶ மற்றும் ταπεινοφροσύνῃ தாழ்மையில் καὶ மற்றும் ἀφειδίᾳ சரீரத்தை–கடுமையாக–நடத்தலில் σώματος, சரீரத்தின் οὐκ இல்லை ἐν –இல் τιμῇ மதிப்பில் τινι, எதாவது πρὸς –நோக்கி πλησμονὴν திருப்திக்கு τῆς –உடைய σαρκός. மாம்சத்தின்
இப்படிப்பட்டப் போதனைகள் சுயவிருப்பமான ஆராதனையையும், போலியான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானம் என்கிற பெயர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பாதுகாப்பதற்கேயன்றி வேறு எதற்கும் உபயோகப்படாது.