1 וְלִבְנֵ֣י –புத்திரருக்கு יִשָׂשכָ֗ר இசக்காரின் תּוֹלָ֧ע தோலா וּפוּאָ֛ה பூவா [ישיב] [யாசீப்] (יָשׁ֥וּב) (யாசூப்) וְשִׁמְר֖וֹן சிம்ரோன் אַרְבָּעָֽה׃ நான்கு ס *
இசக்காருடைய மகன்கள் தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நான்கு பேர்.
2 וּבְנֵ֣י –புத்திரர் תוֹלָ֗ע தோலாவின் עֻזִּ֡י ஊசி וּרְפָיָ֡ה ரெபாயா וִֽ֠ירִיאֵל யெரியேல் וְיַחְמַ֨י யக்மாய் וְיִבְשָׂ֜ם இப்சாம் וּשְׁמוּאֵ֗ל சாமுவேல் רָאשִׁ֤ים தலைவர்கள் לְבֵית־ –வீட்டிற்கு אֲבוֹתָם֙ –பிதாக்களின் לְתוֹלָ֔ע –தோலாவுக்கு גִּבּ֥וֹרֵי பராக்கிரமசாலிகள் חַ֖יִל வல்லமையின் לְתֹלְדוֹתָ֑ם –தலைமுறைகளின்படி מִסְפָּרָם֙ எண்ணிக்கை בִּימֵ֣י –நாட்களில் דָוִ֔יד தாவீதின் עֶשְׂרִֽים־ இருபது– וּשְׁנַ֥יִם இரண்டு אֶ֖לֶף ஆயிரம் וְשֵׁ֥שׁ ஆறு מֵאֽוֹת׃ நூறு ס *
தோலாவின் மகன்கள் ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்களுடைய பிதாக்கள் வம்சத்தலைவர்களும் தங்களுடைய சந்ததிகளிலே பெலசாலிகளுமாக இருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்து அறுநூறு பேர்களாக இருந்தது.
3 וּבְנֵ֥י –புத்திரர் עֻזִּ֖י ஊசியின் יִֽזְרַֽחְיָ֑ה இஸ்ரக்கியா וּבְנֵ֣י –புத்திரர் יִֽזְרַֽחְיָ֗ה இஸ்ரக்கியாவின் מִֽיכָאֵ֡ל மீகாவேல் וְ֠עֹבַדְיָה ஒபதியா וְיוֹאֵ֧ל யோவேல் יִשִּׁיָּ֛ה இஷ்ஷியா חֲמִשָּׁ֖ה ஐந்து רָאשִׁ֥ים தலைவர்கள் כֻּלָּֽם׃ எல்லாரும்
ஊசியின் மகன்களில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் மகன்கள் மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவர்களாக இருந்தார்கள்.
4 וַעֲלֵיהֶ֨ם அவர்கள்–மேல் לְתֹלְדוֹתָ֜ם –தலைமுறைகளின்படி לְבֵ֣ית –வீட்டிற்கு אֲבוֹתָ֗ם –பிதாக்களின் גְּדוּדֵי֙ படைகள் צְבָ֣א சேனையின் מִלְחָמָ֔ה யுத்தத்தின் שְׁלֹשִׁ֥ים முப்பது וְשִׁשָּׁ֖ה ஆறு אָ֑לֶף ஆயிரம் כִּֽי־ ஏனெனில்– הִרְבּ֥וּ பெருகச்செய்தார்கள் נָשִׁ֖ים மனைவிகளை וּבָנִֽים׃ புத்திரரையும்
அவர்கள் முன்னோர்களின் வம்சத்தார்களான அவர்கள் சந்ததிகளில் யுத்தமனிதர்களான கூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர்களோடு இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மனைவிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.
5 וַאֲחֵיהֶ֗ם அவர்கள்–சகோதரர் לְכֹל֙ –எல்லா מִשְׁפְּח֣וֹת குடும்பங்களின் יִשָׂשכָ֔ר இசக்காரின் גִּבּוֹרֵ֖י பராக்கிரமசாலிகள் חֲיָלִ֑ים வல்லமையுள்ளவர்கள் שְׁמוֹנִ֤ים எண்பது וְשִׁבְעָה֙ ஏழு אֶ֔לֶף ஆயிரம் הִתְיַחְשָׂ֖ם வம்சாவளிப்பட்டியல் לַכֹּֽל׃ –எல்லாருக்கும் פ *
இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்கு சகோதரர்களான பெலசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம் பேர்களாக இருந்தார்கள்.
6 בִּנְיָמִ֗ן பென்யமீன் בֶּ֧לַע பேலா וָבֶ֛כֶר பெக்கேர் וִידִֽיעֲאֵ֖ל யெதியாவேல் שְׁלֹשָֽׁה׃ மூன்று
பென்யமீன் மகன்கள் பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.
7 וּבְנֵ֣י –புத்திரர் בֶ֗לַע பேலாவின் אֶצְבּ֡וֹן எஸ்போன் וְעֻזִּ֡י ஊசி וְ֠עֻזִּיאֵל ஊசியேல் וִירִימ֨וֹת யெரிமோத் וְעִירִ֜י ஈரி חֲמִשָּׁ֗ה ஐந்து רָאשֵׁי֙ தலைவர்கள் בֵּ֣ית –வீட்டின் אָב֔וֹת –பிதாக்களின் גִּבּוֹרֵ֖י பராக்கிரமசாலிகள் חֲיָלִ֑ים வல்லமையுள்ளவர்கள் וְהִתְיַחְשָׂ֗ם வம்சாவளிப்பட்டியல் עֶשְׂרִ֤ים இருபது וּשְׁנַ֙יִם֙ இரண்டு אֶ֔לֶף ஆயிரம் וּשְׁלֹשִׁ֖ים முப்பது וְאַרְבָּעָֽה׃ நான்கு ס *
பேலாவின் மகன்கள் எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தில் பெலசாலிகளான ஐந்து தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களுடைய வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்திரெண்டாயிரத்து முப்பத்துநான்குபேர்.
8 וּבְנֵ֣י –புத்திரர் בֶ֗כֶר பெக்கேரின் זְמִירָ֡ה செமிரா וְיוֹעָ֡שׁ யோவாஷ் וֶ֠אֱלִיעֶזֶר எலியேசர் וְאֶלְיוֹעֵינַ֤י எல்யோவேனாய் וְעָמְרִי֙ ஒம்ரி וִירֵמ֣וֹת யெரேமோத் וַאֲבִיָּ֔ה அபியா וַעֲנָת֖וֹת ஆனதோத் וְעָלָ֑מֶת அல்லாமேத் כָּל־ எல்லா– אֵ֖לֶּה இவர்கள் בְּנֵי־ புத்திரர்– בָֽכֶר׃ பெக்கேரின்
பெகேரின் மகன்கள் செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் பெகேரின் மகன்கள்.
9 וְהִתְיַחְשָׂ֣ם வம்சாவளிப்பட்டியல் לְתֹלְדוֹתָ֗ם –தலைமுறைகளின்படி רָאשֵׁי֙ தலைவர்கள் בֵּ֣ית –வீட்டின் אֲבוֹתָ֔ם –பிதாக்களின் גִּבּוֹרֵ֖י பராக்கிரமசாலிகள் חָ֑יִל வல்லமையின் עֶשְׂרִ֥ים இருபது אֶ֖לֶף ஆயிரம் וּמָאתָֽיִם׃ இருநூறு ס *
தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவர்களாகிய அவர்களுடைய சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பெலசாலிகள் இருபதாயிரத்து இருநூறுபேர்.
10 וּבְנֵ֥י –புத்திரர் יְדִיעֲאֵ֖ל யெதியாவேலின் בִּלְהָ֑ן பில்கான் וּבְנֵ֣י –புத்திரர் בִלְהָ֗ן பில்கானின் [יעיש] [யெயூஷ்] (יְע֡וּשׁ) (யெயூஷ்) וּ֠בִנְיָמִן பென்யமீன் וְאֵה֤וּד ஏகூத் וּֽכְנַעֲנָה֙ கெனானா וְזֵיתָ֔ן சேத்தான் וְתַרְשִׁ֖ישׁ தர்ஷீஷ் וַאֲחִישָֽׁחַר׃ அகிசாகார்
யெதியாயேலின் மகன்களில் ஒருவன் பில்கான்; பில்கானின் மகன்கள் ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.
11 כָּל־ எல்லா– אֵ֜לֶּה இவர்கள் בְּנֵ֤י புத்திரர் יְדִֽיעֲאֵל֙ யெதியாவேலின் לְרָאשֵׁ֣י –தலைவர்களாக הָאָב֔וֹת –பிதாக்களின் גִּבּוֹרֵ֖י பராக்கிரமசாலிகள் חֲיָלִ֑ים வல்லமையுள்ளவர்கள் שִׁבְעָֽה־ பதினேழு– עָשָׂ֥ר — אֶ֙לֶף֙ ஆயிரம் וּמָאתַ֔יִם இருநூறு יֹצְאֵ֥י புறப்படுகிறவர்கள் צָבָ֖א சேனைக்கு לַמִּלְחָמָֽה׃ –யுத்தத்திற்கு
யெதியாயேலின் மகன்களாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தார்களில் தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களான பெலசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.
12 וְשֻׁפִּ֤ם சுப்பீம் וְחֻפִּם֙ உப்பீம் בְּנֵ֣י புத்திரர் עִ֔יר ஈரின் חֻשִׁ֖ם ஊஷீம் בְּנֵ֥י புத்திரர் אַחֵֽר׃ ஆகேரின்
சுப்பீமும், உப்பீமும் ஈரின் மகன்கள் ஊசிம் ஆகேரின் மகன்களில் ஒருவன்.
13 בְּנֵ֣י புத்திரர் נַפְתָּלִ֗י நப்தலியின் יַחֲצִיאֵ֧ל யக்சியேல் וְגוּנִ֛י கூனி וְיֵ֥צֶר யேசேர் וְשַׁלּ֖וּם சல்லூம் בְּנֵ֥י புத்திரர் בִלְהָֽה׃ பில்காளின் פ *
நப்தலியின் மகன்களான பில்காளின் பேரன்மார்கள், யாத்தியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள்.
14 בְּנֵ֣י புத்திரர் מְנַשֶּׁ֔ה மனாசேயின் אַשְׂרִיאֵ֖ל அஸ்ரியேல் אֲשֶׁ֣ר அவனை– יָלָ֑דָה பெற்றாள் פִּֽילַגְשׁוֹ֙ அவன்–மறுமனைவி הָֽאֲרַמִּיָּ֔ה –அரமேய יָלְדָ֕ה பெற்றாள் אֶת־ – מָכִ֖יר மாகீரை אֲבִ֥י தகப்பன் גִלְעָֽד׃ கிலெயாதின்
மனாசேயின் மகன்களில் ஒருவன் அஸ்ரியேல்; அவனுடைய மறுமனையாட்டியாகிய அராமிய பெண்ணிடம் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான்.
15 וּמָכִ֞יר மாகீர் לָקַ֤ח எடுத்தான் אִשָּׁה֙ மனைவியை לְחֻפִּ֣ים –உப்பீமுக்கும் וּלְשֻׁפִּ֔ים –சுப்பீமுக்கும் וְשֵׁ֤ם பெயர் אֲחֹתוֹ֙ அவன்–சகோதரியின் מַעֲכָ֔ה மாகா וְשֵׁ֥ם பெயர் הַשֵּׁנִ֖י –இரண்டாவதின் צְלָפְחָ֑ד செலோப்பகாத் וַתִּהְיֶ֥נָה இருந்தார்கள் לִצְלָפְחָ֖ד –செலோப்பகாதுக்கு בָּנֽוֹת׃ குமாரத்திகள்
மாகீர் மாகாள் என்னும் பெயருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியைத் திருமணம் செய்தான்; மனாசேயின் இரண்டாம் மகன் செலோப்பியாத்; செலொப்பியாத்திற்கு மகள்கள் இருந்தார்கள்.
16 וַתֵּ֨לֶד பெற்றாள் מַעֲכָ֤ה மாகா אֵֽשֶׁת־ மனைவி– מָכִיר֙ மாகீரின் בֵּ֔ן மகனை וַתִּקְרָ֤א அழைத்தாள் שְׁמוֹ֙ அவன்–பெயரை פֶּ֔רֶשׁ பெரேஷ் וְשֵׁ֥ם பெயர் אָחִ֖יו அவன்–சகோதரனின் שָׁ֑רֶשׁ சாரேஷ் וּבָנָ֖יו அவன்–புத்திரரும் אוּלָ֥ם ஊலாம் וָרָֽקֶם׃ ராக்கேம்
மாகீரின் மனைவியாகிய மாக்காள் ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு பேரேஸ் என்று பெயரிட்டாள்; இவனுடைய சகோதரனின் பெயர் சேரேஸ்; இவனுடைய மகன்கள் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.
17 וּבְנֵ֥י –புத்திரர் אוּלָ֖ם ஊலாமின் בְּדָ֑ן பெதான் אֵ֚לֶּה இவர்கள் בְּנֵ֣י புத்திரர் גִלְעָ֔ד கிலெயாதின் בֶּן־ –மகன் מָכִ֖יר மாகீரின் בֶּן־ –மகன் מְנַשֶּֽׁה׃ மனாசேயின்
ஊலாமின் மகன்களில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் மகன்கள்.
18 וַאֲחֹת֖וֹ அவன்–சகோதரி הַמֹּלֶ֑כֶת –அம்மோலெக்கேத் יָלְדָה֙ பெற்றாள் אֶת־ – אִישְׁה֔וֹד ஈஷ்கோதை וְאֶת־ – אֲבִיעֶ֖זֶר அபியேசரை וְאֶת־ – מַחְלָֽה׃ மக்லாவை
இவனுடைய சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.
19 וַיִּהְי֖וּ இருந்தார்கள் בְּנֵ֣י புத்திரர் שְׁמִידָ֑ע செமிதாவின் אַחְיָ֣ן அக்கியான் וָשֶׁ֔כֶם சேக்கேம் וְלִקְחִ֖י லிக்கி וַאֲנִיעָֽם׃ அனியாம் פ *
செமீதாவின் மகன்கள் அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள்.
20 וּבְנֵ֥י –புத்திரர் אֶפְרַ֖יִם எப்பிராயீமின் שׁוּתָ֑לַח சூத்தலா וּבֶ֤רֶד பேரேத் בְּנוֹ֙ அவன்–மகன் וְתַ֣חַת தாகாத் בְּנ֔וֹ அவன்–மகன் וְאֶלְעָדָ֥ה எலெயாதா בְנ֖וֹ அவன்–மகன் וְתַ֥חַת தாகாத் בְּנֽוֹ׃ அவன்–மகன்
எப்பிராயீமின் மகன்களில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய மகன் பேரேத்; இவனுடைய மகன் தாகாத்; இவனுடைய மகன் எலாதா; இவனுடைய மகன் தாகாத்.
21 וְזָבָ֥ד சாபாத் בְּנ֛וֹ அவன்–மகன் וְשׁוּתֶ֥לַח சூத்தலா בְּנ֖וֹ அவன்–மகன் וְעֵ֣זֶר ஏசேர் וְאֶלְעָ֑ד எலெயாத் וַהֲרָג֗וּם கொன்றார்கள் אַנְשֵׁי־ மனிதர்கள்– גַת֙ காத்தின் הַנּוֹלָדִ֣ים –பிறந்தவர்கள் בָּאָ֔רֶץ –தேசத்தில் כִּ֣י ஏனெனில் יָרְד֔וּ இறங்கினார்கள் לָקַ֖חַת எடுக்க אֶת־ – מִקְנֵיהֶֽם׃ –ஆடுமாடுகளை
இவனுடைய மகன் சாபாத்; இவனுடைய மகன்கள் சுத்தெலாக், ஏசேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூரார்களுடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனதால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
22 וַיִּתְאַבֵּ֛ל துக்கித்தான் אֶפְרַ֥יִם எப்பிராயீம் אֲבִיהֶ֖ם அவர்கள்–தகப்பன் יָמִ֣ים நாட்கள் רַבִּ֑ים அநேகம் וַיָּבֹ֥אוּ வந்தார்கள் אֶחָ֖יו அவன்–சகோதரர் לְנַחֲמֽוֹ׃ –ஆறுதல்படுத்த
அவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேக நாட்கள் துக்கங்கொண்டாடும்போது, அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள்.
23 וַיָּבֹא֙ வந்தான் אֶל־ –நோக்கி אִשְׁתּ֔וֹ அவன்–மனைவியை וַתַּ֖הַר கர்ப்பவதியானாள் וַתֵּ֣לֶד பெற்றாள் בֵּ֑ן மகனை וַיִּקְרָ֤א அழைத்தான் אֶת־ – שְׁמוֹ֙ அவன்–பெயரை בְּרִיעָ֔ה பெரியா כִּ֥י ஏனெனில் בְרָעָ֖ה –தீமையில் הָיְתָ֥ה இருந்தது בְּבֵיתֽוֹ׃ –அவன்–வீட்டில்
பின்பு அவன் தன்னுடைய மனைவியிடம் இணைந்ததால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு மகனைப் பெற்றாள்; அவன், தன்னுடைய குடும்பத்திற்குத் தீங்கு உண்டானதால், இவனுக்கு பெரீயா என்று பெயரிட்டான்.
24 וּבִתּ֣וֹ அவன்–குமாரத்தி שֶׁאֱרָ֔ה செயேரா וַתִּ֧בֶן கட்டினாள் אֶת־ – בֵּית־חוֹר֛וֹן பெத்–ஓரோனை הַתַּחְתּ֖וֹן –கீழ் וְאֶת־ – הָעֶלְי֑וֹן –மேல் וְאֵ֖ת – אֻזֵּ֥ן ஊசேன் שֶׁאֱרָֽה׃ செயேராவின்
இவனுடைய மகளாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தொரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.
25 וְרֶ֣פַח ரேப்பா בְּנ֗וֹ அவன்–மகன் וְרֶ֧שֶׁף ரேசேப் וְתֶ֛לַח தேலா בְּנ֖וֹ அவன்–மகன் וְתַ֥חַן தாகான் בְּנֽוֹ׃ அவன்–மகன்
அவனுடைய மகன்கள் ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய மகன் தேலாக்; இவனுடைய மகன் தாகான்.
26 לַעְדָּ֥ן லாதான் בְּנ֛וֹ அவன்–மகன் עַמִּיה֥וּד அம்மிகூத் בְּנ֖וֹ அவன்–மகன் אֱלִישָׁמָ֥ע எலிஷாமா בְּנֽוֹ׃ அவன்–மகன்
இவனுடைய மகன் லாதான்; இவனுடைய மகன் அம்மீயூத்; இவனுடைய மகன் எலிஷாமா.
27 נ֥וֹן நூன் בְּנ֖וֹ அவன்–மகன் יְהוֹשֻׁ֥עַ யோசுவா בְּנֽוֹ׃ அவன்–மகன்
இவனுடைய மகன் நூன்; இவனுடைய மகன் யோசுவா.
28 וַאֲחֻזָּתָם֙ அவர்கள்–சொத்தும் וּמֹ֣שְׁבוֹתָ֔ם குடியிருப்புகளும் בֵּֽית־אֵ֖ל பெத்–ஏல் וּבְנֹתֶ֑יהָ –கிராமங்களும் וְלַמִּזְרָ֣ח –கிழக்கே נַעֲרָ֔ן நாராண் וְלַֽמַּעֲרָ֗ב –மேற்கே גֶּ֤זֶר கேசேர் וּבְנֹתֶ֙יהָ֙ –கிராமங்களும் וּשְׁכֶ֣ם சீகேம் וּבְנֹתֶ֔יהָ –கிராமங்களும் עַד־ –வரை עַיָּ֖ה அய்யா וּבְנֹתֶֽיהָ׃ –கிராமங்களும்
அவர்களுடைய சொந்த நிலங்களும், தங்குமிடங்களும், கிழக்கே இருக்கிற நாரானும், மேற்கே இருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதின் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாவரையுள்ள அதின் கிராமங்களும்,
29 וְעַל־ –மேல் יְדֵ֣י –கைகளில் בְנֵי־ புத்திரர்– מְנַשֶּׁ֗ה மனாசேயின் בֵּית־שְׁאָ֤ן பெத்–சேயான் וּבְנֹתֶ֙יהָ֙ –கிராமங்களும் תַּעְנַ֣ךְ தானாக் וּבְנֹתֶ֔יהָ –கிராமங்களும் מְגִדּ֥וֹ மெகிதோ וּבְנוֹתֶ֖יהָ –கிராமங்களும் דּ֣וֹר தோர் וּבְנוֹתֶ֑יהָ –கிராமங்களும் בְּאֵ֙לֶּה֙ –இவைகளில் יָשְׁב֔וּ குடியிருந்தார்கள் בְּנֵ֥י புத்திரர் יוֹסֵ֖ף யோசேப்பின் בֶּן־ –மகன் יִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேலின் פ *
மனாசே கோத்திரத்தின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இந்த இடங்களில் இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் சந்ததியர்கள் குடியிருந்தார்கள்.
30 בְּנֵ֣י புத்திரர் אָשֵׁ֗ר ஆசேரின் יִמְנָ֧ה இம்னா וְיִשְׁוָ֛ה இஷ்வா וְיִשְׁוִ֥י இஷ்வி וּבְרִיעָ֖ה பெரியா וְשֶׂ֥רַח சேரா אֲחוֹתָֽם׃ அவர்கள்–சகோதரி
ஆசேரின் மகன்கள் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி சேராள்.
31 וּבְנֵ֣י –புத்திரர் בְרִיעָ֔ה பெரியாவின் חֶ֖בֶר கேபேர் וּמַלְכִּיאֵ֑ל மல்கியேல் ה֖וּא அவன் אֲבִ֥י தகப்பன் [ברזות] [பிர்சாயித்தின்] (בִרְזָֽיִת׃) (பிர்சாயித்தின்)
பெரீயாவின் மகன்கள் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.
32 וְחֶ֙בֶר֙ கேபேர் הוֹלִ֣יד ஜெநித்தான் אֶת־ – יַפְלֵ֔ט யப்லேத்தை וְאֶת־ – שׁוֹמֵ֖ר சோமேரை וְאֶת־ – חוֹתָ֑ם ஓதாமை וְאֵ֖ת – שׁוּעָ֥א சூவாவை אֲחוֹתָֽם׃ அவர்கள்–சகோதரி
ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஓதாமையும், இவர்களுடைய சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.
33 וּבְנֵ֣י –புத்திரர் יַפְלֵ֔ט யப்லேத்தின் פָּסַ֥ךְ பாசாக் וּבִמְהָ֖ל பிம்கால் וְעַשְׁוָ֑ת அஸ்வாத் אֵ֖לֶּה இவர்கள் בְּנֵ֥י புத்திரர் יַפְלֵֽט׃ யப்லேத்தின்
யப்லேத்தின் மகன்கள் பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் மகன்கள்.
34 וּבְנֵ֖י –புத்திரர் שָׁ֑מֶר சாமேரின் אֲחִ֥י அகி [ורוהגה] [ரோகா] (וְרָהְגָּ֖ה) (ரோகா) [יחבה] [யெகுபா] (וְחֻבָּ֥ה) (உபா) וַאֲרָֽם׃ ஆராம்
சோமேரின் மகன்கள் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.
35 וּבֶן־ –மகன் הֵ֖לֶם ஏலேமின் אָחִ֑יו அவன்–சகோதரன் צוֹפַ֥ח சோப்பா וְיִמְנָ֖ע இம்னா וְשֵׁ֥לֶשׁ சேலேஷ் וְעָמָֽל׃ ஆமால்
அவனுடைய சகோதரனாகிய ஏலேமின் மகன்கள் சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.
36 בְּנֵ֖י புத்திரர் צוֹפָ֑ח சோப்பாவின் ס֧וּחַ சூவா וְחַרְנֶ֛פֶר அர்னேப்பேர் וְשׁוּעָ֖ל சூவால் וּבֵרִ֥י பேரி וְיִמְרָֽה׃ இம்ரா
சோபாக்கின் மகன்கள் சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,
37 בֶּ֣צֶר பேசேர் וָה֗וֹד ஓத் וְשַׁמָּ֧א சம்மா וְשִׁלְשָׁ֛ה சில்ஷா וְיִתְרָ֖ן இத்ரான் וּבְאֵרָֽא׃ பெயேரா
பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள்.
38 וּבְנֵ֖י –புத்திரர் יֶ֑תֶר யேத்தேரின் יְפֻנֶּ֥ה யெப்புன்னே וּפִסְפָּ֖ה பிஸ்பா וַאְרָֽא׃ ஆரா
யெத்தேரின் மகன்கள் எப்புனே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.
39 וּבְנֵ֖י –புத்திரர் עֻלָּ֑א உல்லாவின் אָרַ֥ח ஆரா וְחַנִּיאֵ֖ל அன்னியேல் וְרִצְיָֽא׃ ரிசியா
உல்லாவின் மகன்கள் ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.
40 כָּל־ எல்லா– אֵ֣לֶּה இவர்கள் בְנֵי־ புத்திரர்– אָ֠שֵׁר ஆசேரின் רָאשֵׁ֨י தலைவர்கள் בֵית־ வீட்டு– הָאָב֤וֹת –பிதாக்களின் בְּרוּרִים֙ தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் גִּבּוֹרֵ֣י பராக்கிரமசாலிகள் חֲיָלִ֔ים வல்லமையுள்ளவர்கள் רָאשֵׁ֖י தலைவர்கள் הַנְּשִׂיאִ֑ים –பிரபுக்களின் וְהִתְיַחְשָׂ֤ם வம்சாவளிப்பட்டியல் בַּצָּבָא֙ –சேனையில் בַּמִּלְחָמָ֔ה –யுத்தத்தில் מִסְפָּרָ֣ם எண்ணிக்கை אֲנָשִׁ֔ים மனிதர்கள் עֶשְׂרִ֥ים இருபது וְשִׁשָּׁ֖ה ஆறு אָֽלֶף׃ ஆயிரம் ס *
ஆசேரின் சந்ததிகளாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தலைவர்களும் தெரிந்துகொள்ளப்பட்ட பெலசாலிகளும், பிரபுக்களின் தலைவர்களுமாக இருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம்பேர்.